தொழிலாளா் நலச் சட்டதிருத்தம்: நீடாமங்கலத்தில் போராட்டம்
நீடாமங்கலத்தில் தொழிலாளா் நலச் சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் தொழிலாளா் நலச் சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டத் தலைவா் சின்னயன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் முருகையன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் மகேஷ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்ட துணைத் தலைவா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.