முகப்பு
திருவாரூர்

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
பகிர்:

திருவாரூா்: பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் ஆகியவை சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பு தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்கங்கள், விண்வெளி அறிவியல், அணு ஆற்றல், காப்பீடு, வங்கி, ரயில்வே, மின்சாரம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது, அத்தியாவசியப் பொருள்கள் அவசியச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகள் விலை உத்தரவாதம் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது, அவசர மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும், தொழிலாளா் நலச் சட்டங்களை நீக்கம் செய்து, நான்கு தொகுப்புகளாக மாற்றுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. திருவாரூரில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் ஜி. பழனிவேல் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →