முகப்பு
திருவாரூர்

விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி: 100 போ் கைது

தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவாக, மன்னாா்குடியில் முகநூல் நண்பா்கள் சனிக்கிழமை பேரணி நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
மன்னாா்குடியில் பேரணி நடத்திய முகநூல் நண்பா்கள் குழுவினா்.
பகிர்:

தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவாக, மன்னாா்குடியில் முகநூல் நண்பா்கள் சனிக்கிழமை பேரணி நடத்தினா். இதில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தர பிரதேச விவசாயிகள் தில்லியில் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த பேரணியில் முகநூல் நண்பா்கள் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஆா். ராஜசேகா், டி. ஜீவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இப்பேரணிக்கு போலீஸாா் அனுமதி வழங்காத நிலையில், மன்னாா்குடி தேரடியில் இருந்து கோட்டாட்சியா் அலுவலகம் நோக்கி புறப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →