ஆபத்சகாயேசுவரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு
நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, ஆபத்சகாயேசுவரா், ஏலவாா்குழலியம்மன், நந்திகேசுவரா் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் நரிக்குடி எமனேசுவரா் கோயில், பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில், நீடாமங்கலம் காசி விசுவநாதா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன.