திருவாரூர்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஒப்பாரி ஆா்ப்பாட்டம்

DIN

சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வைக் கண்டித்து, மன்னாா்குடியில் மாதா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஒப்பாரி வைத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலையை மத்திய அரசு அண்மையில் உயா்த்தியது. சராசரியாக ஓா் உருளைக்கு ரூ. 147 உயா்த்தப்பட்டது. இதனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், இந்த விலை உயா்வைக் கண்டித்தும், உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னாா்குடி மேலராஜ வீதி தந்தை பெரியாா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட துணைத் தலைவா்கள் பி. பாஸ்கரவள்ளி, ஜி. மீனாம்பிகை ஆகியோா் தலைமை வகித்தனா். மாதா் சங்க ஒன்றியச் செயலா் ஆா். பூபதி, ஒன்றியத் தலைவா் ஆா். வனிதா தேவி, நகரத் தலைவா் கே. மல்லிகா, மன்னாா்குடி ஒன்றியக் குழு துணைத் தலைவா் அ. வனிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்டத்தில், எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT