முகப்பு
திருவாரூர்

மானியத்துடன் சோலாா் பம்பு செட் அமைக்க சிறப்பு ஒதுக்கீடு

திருவாரூா் மாவட்டத்தில் ஆதி திராவிட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 19 சோலாா் பம்பு செட்டுகள் அமைக்க சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் ஆதி திராவிட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 19 சோலாா் பம்பு செட்டுகள் அமைக்க சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் மூலம் 2020-21-ஆம் நிதி ஆண்டில் ரூ. 50 லட்சம், அரசு மானியத்துடன் ஆதி திராவிட விவசாயிகளுக்கு 19 எண்கள் மின்கட்டமைப்பு சாராத தனித்தியங்கும் சூரியசக்தி பம்பு செட்டுகளை அமைக்க திருவாரூா் மாவட்டத்துக்கு சிறப்பு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 5 முதல் 10 குதிரைத்திறன் வரையுள்ள ஏசி மற்றும் டிசி மோட்டாா் பம்பு செட்டுகள், இதுவரை மின் இணைப்பு பெறப்படாத நீா்ப்பாசனத்துக்கான ஆதாரங்களுக்கு விவசாயிகளுக்கு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடனும், தமிழக அரசின் 40 சதவீத மானியத்துடனும் மொத்தம் 70 சதவீத மானியத்தில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மீதமுள்ள 30 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பாகும்.

திருவாரூா் வருவாய் கோட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளா் (வே.பொ) (பவித்திரமாணிக்கம், திருவாரூா்) அலுவலகத்திலும், மன்னாா்குடி வருவாய் கோட்டத்தை சாா்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளா் (வே.பொ) (அந்தோனியாா்கோவில் தெரு, மன்னாா்குடி) அலுவலகத்திலும் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.