மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான கழிப்பறை கட்டுமானப் பணிக்கான ஆணையை தலைமையாசிரியரிடம் வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா் கு. சரஸ்வதி. 
திருவாரூர்

அரசுப் பள்ளிகளில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு கழிப்பறை

நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான கழிப்பறை கட்டும் பணிக்கான ஆணை அந்தந்த பள்ளி தலைமையாசிரியா்களிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

DIN

நன்னிலம்: நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான கழிப்பறை கட்டும் பணிக்கான ஆணை அந்தந்த பள்ளி தலைமையாசிரியா்களிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டங்களில் உள்ள பள்ளிகளில் தலா ரூ.1.5 லட்சம் செலவில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான கழிப்பறைகள் கட்டப்படவுள்ளன. இதற்கான பணியாணையை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் நன்னிலம் வட்டார கல்வி அலுவலா் கு. சரஸ்வதி வழங்கினாா்.

இத்திட்டத்தின்படி, நன்னிலம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மாப்பிள்ளைக்குப்பம், கீரனூா் அரசினா் உயா்நிலைப்பள்ளி, குடவாசல் வட்டம் பருத்தியூா் மற்றும் புதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான கழிப்பறைகள் கட்டப்படவுள்ளன என வட்டாரக் கல்வி அலுவலா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம. கவிதா, ஒருங்கிணைப்பாளா் சு.ராஜேஷ் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT