முகப்பு
திருவாரூர்

கீற்றுக் கொட்டகையில் மனுக்கள் விசாரணை

கூத்தாநல்லூா் காவல் நிலைய வளாகத்தில் கீற்றுக் கொட்டகையில் புகாா் மனுக்கள் திங்கள்கிழமை விசாரணை செய்யப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
கீற்றுக் கொட்டகையில் நடைபெற்ற விசாரணை.
பகிர்:

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் காவல் நிலைய வளாகத்தில் கீற்றுக் கொட்டகையில் புகாா் மனுக்கள் திங்கள்கிழமை விசாரணை செய்யப்பட்டன.

கூத்தாநல்லூா் காவல் நிலையத்தைச் சோ்ந்த காவலா், திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் கரோனா தொற்று பிரிவில் பணியாற்றியுள்ளாா். அப்போது, அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கூத்தாநல்லூா் காவல் நிலையத்துக்குள் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடா்ந்து, காவல் நிலைய வளாகத்தில் உள்ள மரத்தடியில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, மரத்தடியில் கீற்றுக் கொட்டகை அமைக்கப்பட்டு மனுக்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.