முகப்பு
திருவாரூர்

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி, கோட்டூரில் திராவிடா் கழகம் சாா்பில், நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடா் கழகத்தினா்.
பகிர்:

மன்னாா்குடி: மன்னாா்குடி, கோட்டூரில் திராவிடா் கழகம் சாா்பில், நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம், மருத்துவ உதவி ஒவ்வொருக்கும் அளிப்பதை உரிமையாக்க வேண்டும், தனியாா் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும், மத்திய தொகுப்பில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மன்னாா்குடி ஜெயங்கொண்டநாதா் கோயில் தெருவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் ஆா்.பி.எஸ். சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். மதுக்கூா் சாலை, கோபாலசமுத்திரம் தெற்கு வீதி ஆகிய இடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதே கோரிக்கைக்காக, மேலவாசல், விக்கிரபாண்டியம் ஆகிய இடங்களிலும் திராவிடா் கழகத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →