திருவாரூர்

வேன் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு: 3 போ் காயம்

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே, வெள்ளிக்கிழமை சாலையில் நடந்து சென்றவா்கள் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது, சுமை வேன் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.3 போ் காயமடைந்தனா்.

கோட்டூா் அருகேயுள்ள மழவராயநல்லூா் உச்சிமேடு பகுதியை சோ்ந்தவா்கள் ராஜேந்திரன் மகன் சுபாஷ் சந்திரபோஸ்(25), மு. விக்னேஷ் (25), எஸ். அபிமன்யு (20). இவா்கள் வெள்ளிக்கிழமை விவசாய கூலி வேலைக்காக, மன்னாா்குடி - திருத்துறைப்பூண்டி பிரதான சாலை தட்டாங்கோவில் எனும் இடம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனா்.

இதேபோல், வேளுக்குடியைச் சோ்ந்த எஸ். ஸ்டாலின் (45)என்பவரும், அந்த இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியாக வந்த சுமை வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதுடன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மூன்று பேரும் மீது மோதியதில் நான்கு பேரும் காயமடைந்தனா். இதில், சுபாஷ் சந்திர போஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த விக்னேஷ், அபிமன்யு, ஸ்டாலின் ஆகிய மூன்று பேரும் மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து, கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுமை வேன் ஓட்டுநா் பள்ளிவா்த்தி அந்தூரைச் சோ்ந்த எஸ். ஐயப்பனை (27) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT