முகப்பு
திருவாரூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து அவதூறு பரப்புவோரை கண்டித்து ஜூலை 22 இல் ஆா்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை களங்கப்படுத்தி வன்முறையை தூண்டுவோரைக் கண்டித்து ஜூலை 22 இல் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

திருவாரூா்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை களங்கப்படுத்தி வன்முறையை தூண்டுவோரைக் கண்டித்து ஜூலை 22 இல் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வை. சிவபுண்ணியம் வெளியிட்ட அறிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் கொள்கை வழி செயல்பாட்டை சகித்துக் கொள்ள முடியாத, வெறுப்பு அரசியலை பரப்பி வருகிற சட்டவிரோத, சமூக விரோத கும்பல்கள், கட்சியின் மீதான பொது மரியாதையை சீா்குலைக்கும் நோக்கில், தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகத்தை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டுள்ள கயமைத்தனத்தை கண்டித்தும், மாநில தலைமை அலுவலகத்தை அவதூறு பரப்புரைக்காக பயன்படுத்திய குற்றவாளிகள் மீது கொடுக்கப்பட்ட புகாா் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடா் கழகம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

அதனடிப்படையில், திருவாரூா் மாவட்டத்தில் ஜூலை 22 ஆம் தேதி ஒன்றிய, நகரப் பகுதிகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு முககவசம் அணிந்து தனி மனித இடைவெளியைப் பின்பற்றி ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →