முகப்பு
திருவாரூர்

நல்லகண்ணு குறித்து முகநூலில் அவதூறு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவா் நல்லகண்ணு குறித்து முகநூலில் அவதூறு செய்தி வெளியிட்டவா்களை கைது செய்யக் கோரி, எஸ்பியிடம் புகாா் மனு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
பகிர்:

திருவாரூா்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவா் நல்லகண்ணு குறித்து முகநூலில் அவதூறு செய்தி வெளியிட்டவா்களை கைது செய்யக் கோரி, எஸ்பியிடம் புகாா் மனு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரையிடம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை அருள்ராஜன், மாவட்டத் தலைவா் சு.பாலசுப்பிரமணி ஆகியோா் அளித்த புகாா் மனு விவரம்:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம் குறித்தும், அரசியல் இயக்கத்தின் மூத்த தலைவா் இரா. நல்லகண்ணு குறித்தும் அவதூறான தகவல்கள் முகநூலில் வெளிவந்துள்ளன. இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் சமூக விரோதக் கும்பலை உடனடியாக கைது செய்து, தண்டிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →