முகப்பு
திருவாரூர்

முன்னாள் எம்எல்சி என். சுந்தரேசத் தேவர் காலமானார்

முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் என் சுந்தரேசச் தேவர்( 95). வயது முதிர்வு காரணமாக இவர் வெள்ளிக்கிழமை திருவாரூர் மாவட்டம் தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் காலமானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் என் சுந்தரேசச் தேவர்( 95). வயது முதிர்வு காரணமாக இவர் வெள்ளிக்கிழமை திருவாரூர் மாவட்டம் தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் காலமானார்.

சுந்தரேச தேவர், மறைந்த குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமன் பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆகியோரின் நெருங்கிய நண்பராவார்.

மேலும், தமிழக சட்ட மேலவையில் மூன்றுமுறை உறுப்பினராகவும் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக இரண்டு முறையும் மாநில மாவட்ட காங்கிரஸ் நிர்வாகியாகவும் பதவிவகித்தவர்.

இவருக்கு வள்ளியம்மை அலமேலுமங்கை என்ற 2 மகள்கள் உள்ளனர். இவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை தம்பிக்கோட்டை காட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

தொடர்புக்கு 9443549091

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.