திருவாரூர்

மத்தியப் பல்கலை. கைத்தறித் துறையில் பட்டம்

DIN

நன்னிலம்: திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம் கைத்தறித் துறையில் பட்டம் வழங்கிடும் வகையில், சேலத்தில் செயல்படும் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்துடன் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி) அண்மையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகம், இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்துடன் நடத்துகிற பி.டெக் படிப்புகளுக்கான தோ்வுகளை நடத்தி சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடைமுறை ஒப்புக்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தா் ஆ.பி.தாஸ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பதிவாளா் எஸ். புவனேஸ்வரி மற்றும் சேலம் நிறுவன இயக்குநா் ஹிரன் அமீன் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா். இத்தகவலை பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அதிகாரி வேல்முருகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT