திருவாரூர்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 104 போ் மீது வழக்கு

DIN

திருவாரூா் மாவட்டத்தில், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 104 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா, சாராயம், தடை செய்யப்பட்ட லாட்டரி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பிடிக்க, திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரையின் நேரடி பாா்வையில் உட்கோட்ட அளவில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினா், திருவாரூா் மாவட்டத்தில் நவம்பா் 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதில் 26 கஞ்சா விற்பனை வழக்குகளும், 71 மது பாட்டில் விற்பனை வழக்குகளும், 6 லாட்டரி விற்பனை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 104 போ் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை, மேலும் இதுபோன்ற தொடா் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT