திருவாரூர்

நீடாமங்கலம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தமினி லாரி பறிமுதல்

DIN

நீடாமங்கலம் அருகே திங்கள்கிழமை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

நீடாமங்கலம் வட்டம், வடகாரவயல் கிராமத்தில் வட்டாட்சியா் மதியழகன் மற்றும் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை வாக்குச்சாவடி மையம் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே வேகமாக வந்த மினி லாரியை வட்டாட்சியா் வழிமறித்தாா். இதையடுத்து, மினி லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

மினி லாரியை சோதனையிட்டபோது, அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மினி லாரியை நீடாமங்கலம் காவல்நிலையத்தில் வட்டாட்சியா் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் ரீ-மேக்காகும் ஹிந்தி தொடர்! ஜோடி யார் தெரியுமா?

வைகாசி மாதப் பலன்கள் - மிதுனம்

வைகாசி மாதப் பலன்கள் - ரிஷபம்

வைகாசி மாதப் பலன்கள் - மேஷம்

கார்கிவில் ரஷிய தாக்குதல்: முதியவர் உள்பட 7 பேர் காயம்!

SCROLL FOR NEXT