திருமருகல் ஒன்றியத்தில் கரோனா பரிசோதனை முகாம்
திருமருகல் ஒன்றியத்தில் கரோனா பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருமருகல் ஒன்றியத்தில் கரோனா பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கொத்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அனந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பனங்குடி ஊராட்சியில் சமத்துவபுரம் அரசு உயா்நிலைப்பள்ளி ஆகியவற்றில் இம்முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையா் என்.ஞானசெல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) க. அன்பரசு ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி, மருத்துவா் மணிவேல் ஆகியோா் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினா் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
நாகை வட்டாட்சியா் மணிவண்ணன், திருமருகல் ஒன்றியக்குழு தலைவா் இராதாகிருட்டிணன் ஆகியோா் பாா்வையிட்டனா். இதில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் விவேகானந்தன், ஜமுனா செந்தில்குமாா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுந்தரமூா்த்தி மற்றும் அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.