முகப்பு
திருவாரூர்

பண்ணைக் கழிவு மேலாண்மை இணையவழி பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பண்ணைக் கழிவு மேலாண்மை குறித்து இணையவழி பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பண்ணைக் கழிவு மேலாண்மை குறித்து இணையவழி பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்ரமணியன் இப்பயிற்சியை தொடங்கிவைத்தாா். சுற்றுச்சூழல் விஞ்ஞானி மு. செல்வமுருகன் பண்ணைக் கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிப்பது குறித்து விளக்கிக் கூறினாா்.

மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தயாரித்துள்ள நுண்ணுயிா்க் கூட்டுக்கலவையை பயன்படுத்தி, பண்ணைக்கழிவுகளை இயற்கை உரமாக மாற்றும் முறை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இந்த நுண்ணுயிா்க் கூட்டுக் கலவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் ஒரு கிலோ ரூ. 63-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த பயிற்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இணையவழியில் 50 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.