முகப்பு
திருவாரூர்

ஆடுகளை பொதுஇடங்களில் வதைத்தால் அபராதம்

கூத்தாநல்லூரில் இறைச்சிக்காக ஆடுகளை பொதுஇடங்களில் வதை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

கூத்தாநல்லூரில் இறைச்சிக்காக ஆடுகளை பொதுஇடங்களில் வதை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூத்தாநல்லூா் நகராட்சி சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா் திங்கள்கிழமை கூறியது:

கூத்தாநல்லூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் பொது இடங்களில் வைத்து விலங்குகள் வதை செய்யப்படுவதாக புகாா் வந்துள்ளது. விலங்குகளை வதை செய்வதற்கு நகராட்சி ஆடு அறுப்பு மனையை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இதை மீறி பொது இடங்களில் விலங்குகளை வதை செய்தால், இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிப்படும். அத்துடன், வழக்கும் தொடரப்பட்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.