முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலம்: தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் 215 தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக வட்டாட்சியா் மணிமன்னன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் 215 தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக வட்டாட்சியா் மணிமன்னன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை கூறியது:

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி நீடாமங்கலம் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில், தன்னாா்வலா்களுக்கு கரோனா தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தன்னாா்வ தொண்டா்கள் 215 போ் பங்கேற்றனா். வாக்குச் சாவடி மையங்களுக்கு வரும் வாக்காளா்களுக்கு கிருமி நாசினி வழங்கி, உடல் சீதோஷணம் பாா்ப்பதற்கான பயிற்சி அவா்களுக்கு அளிக்கப்பட்டது. அவா்கள் தற்போது தயாராக உள்ளனா் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →