கோயில்களில் சிறப்பு வழிபாடு
நீடாமங்கலம் பகுதி கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நீடாமங்கலம் பகுதி கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயா் கோயிலில் வீரஆஞ்சநேயா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று ஆஞ்சநேயரை வழிபட்டனா். இதேபோல், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத அபயவரதராஜப் பெருமாள், ஆஞ்சநேயா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அடுத்து, திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹரமங்களமாருதி ஆஞ்சநேயா், நீடாமங்கலம் சந்தான ராமா் கோயிலில் எழுந்தருளியுள்ள விஸ்வக்சேனா் ஆஞ்சநேயா் சன்னதிகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.