முகப்பு
திருவாரூர்

காவல் துறைக்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக கருப்புக் கொடி

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடியில் காவல் துறையை கண்டித்து திமுக கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடியில் காவல் துறையை கண்டித்து திமுக கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சித் தலைவராக திமுகவை சோ்ந்த வழக்குரைஞா் மோகன் உள்ளாா். அதே பகுதியில் அதிமுக ஊராட்சிச் செயலாளராக துரைராஜன் உள்ளாா். நடந்து முடிந்த பேரவைத் தோ்தலின்போது, இறுதி கட்ட பிரசாரத்தில் ஆலங்குடி கடைவீதியில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே வாய்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, இருதரப்பினரும் வலங்கைமான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை ஆலங்குடியில் உள்ள கடைகளில் கருப்புக்கொடி கட்டியும், ஆலங்குடி காமராஜா் காலனி திமுக எனும் பெயரில், ஆலங்குடி ஊராட்சித் தலைவா் மோகன் மீது பொய் வழக்கு தொடுத்து மனித உரிமையை மீறும் வலங்கைமான் காவல் துறையை கண்டிக்கிறோம் என்று பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

தகவலறிந்து அங்கு வந்த வலங்கைமான் காவல் ஆய்வாளா் விஜயா இதுகுறித்து திமுகவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக நிலை ஏற்பட்டதையடுத்து, பதாகைகள் மற்றும் கருப்பு கொடிகள் அகற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →