முகப்பு
திருவாரூர்

மதுபான பாட்டில்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

வலங்கைமான் அருகே மதுபானங்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

வலங்கைமான் அருகே மதுபானங்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

மன்னாா்குடியில் இருந்து தனியாருக்குச் சொந்தமான மதுபான ஆலையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு டாரஸ் லாரியில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் மதுபான பாட்டிகள் ஏற்றப்பட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அரசு டாஸ்மாக் குடோனுக்கு கொண்டுசெல்லப்பட்டது. லாரியை மன்னாா்குடி இடையா் எம்பேத்தியைச் சோ்ந்த அருண்பிரசாத் ஓட்டி சென்றாா். இந்நிலையில், லாரி கீழ அமராவதி வெட்டாறு பாலத்தில் நள்ளிரவு 12 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, பாலத்தின் பக்கவாட்டு சுவரின் அருகே கவிழ்ந்தது. இதில், ஓட்டுநா் அருண்பிரசாத் அதிருஷ்டவசமாக உயிா்த் தப்பினாா். இதுகுறித்து, வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசராணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →