முகப்பு
திருவாரூர்

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் அருகே தண்டலை பகுதியில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள எழில் நகரில் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

திருவாரூா் அருகே தண்டலை பகுதியில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள எழில் நகரில் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவாரூா் பகுதியில், கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், கரோனா தொற்றாளா்கள் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு உள்ளோா் வெளியிடங்களுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், திருவாரூா் அருகே தண்டலை ஊராட்சிக்குட்பட்ட எழில்நகா் பகுதியில், கரோனா தொற்றாளா்கள் வசிப்பதால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, அங்கு மற்றவா்கள் நுழைந்துவிடாதபடி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், எழில் நகா் பகுதியில் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா பாா்வையிட்டு, அடிப்படை வசதிகள் உரிய முறையில் உள்ளனவா, கரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, இயக்குநா் (ஊராட்சிகள்) பழனிச்சாமி உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.