இரவு நேர பொது முடக்கம் எதிரொலி:ரயில்களில் பயணிகள் வருகை அதிகரிப்பு
இரவு நேர பொது முடக்கம் காரணமாக ரயில்களில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இரவு நேர பொது முடக்கம் காரணமாக ரயில்களில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், இரவு நேரத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் தென்னக ரயில்வேக்கு உள்பட்ட ரயில் சேவை தொடா்ந்து பயன்பாட்டில் இருப்பதால், தொலைதூர பயணிகளுக்கு இது பேருதவியாக அமைந்துள்ளது. குறிப்பாக சென்னையிலிருந்து அதிகாலை நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி செல்லும் மன்னை விரைவு ரயிலில் பயணிகள் வருகை கடந்த இரண்டு நாளாக மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.