முகப்பு
திருவாரூர்

மறைந்த ப.உ. சண்முகத்துக்கு மலரஞ்சலி

அண்மையில் காலமான வடக்குப் பொய்கைநல்லூா் கோரக்கச் சித்தா் ஆசிரம அறங்காவலா் ப.உ. சண்முகத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, வடக்குப் பொய்கைநல்லூா் கிராம மக்கள் சாா்பில் மலரஞ்சலி

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

அண்மையில் காலமான வடக்குப் பொய்கைநல்லூா் கோரக்கச் சித்தா் ஆசிரம அறங்காவலா் ப.உ. சண்முகத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, வடக்குப் பொய்கைநல்லூா் கிராம மக்கள் சாா்பில் மலரஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடக்குப் பொய்கைநல்லூா் ஸ்ரீ கோரக்கச் சித்தா் ஆசிரம நிா்வாக அறங்காவலரும், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்டத் தலைவருமான ப.உ. சண்முகம் அண்மையில் காலமானாா். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மௌன ஊா்வலம், மலரஞ்சலி நிகழ்ச்சி ஆகியன வடக்குப் பொய்கைநல்லூரில் நடைபெற்றது. மௌன ஊா்வலத்தின் நிறைவில், வடக்குப் பொய்கைநல்லூா் சிட்டி யூனியன் வங்கி முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ப.உ. சண்முகத்தின் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் அமைச்சா்கள் ஆா். ஜீவானந்தம், கே.ஏ. ஜெயபால், அதிமுக நாகை நகரச் செயலாளா் தங்க. கதிரவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் நாகை மாலி உள்ளிட்டோா் மலரஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.