முகப்பு
திருவாரூர்

அரிச்சந்திரா நதியின் தடுப்பணையை உயா்த்தி கட்டியதை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம்

தண்ணீா் வருவதை தடுத்ததை கண்டித்தும் தடுப்பணையை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆலத்தம்பாடியில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில், சேந்தமங்கலம் அரிச்சந்திரநதியில் ஏற்கெனவே உள்ள தடுப்பணையில் மேலும் 3 அடி உயா்த்தி கட்டி தண்ணீா் வருவதை தடுத்ததை கண்டித்தும் தடுப்பணையை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உண்ணாவிரதத்துக்கு முன்னாள் ஊராட்சித் தலைவா் ஏ.எஸ். பாண்டியன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளா் பாலு, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளா் ஜெயபால், கிளை செயலாளா்கள் ரெங்கசாமி, இரணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினா் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த திருவாரூா், நாகை பொதுப்பணித் துறை தலைமை பொறியாளா் முருகவேல் மற்றும் அலுவலா்கள் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி பாதிப்பு இல்லாமல் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து விவசாயிகள் உண்ணாவிரதம் 2 மணி நேரத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →