நகராட்சி ஆணையரிடம் தகராறு பாமக நிா்வாகி உள்பட 6 போ் மீது வழக்கு
திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையரிடம் தகராறு செய்ததாக பாமக நகரச் செயலாளா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையரிடம் தகராறு செய்ததாக பாமக நகரச் செயலாளா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருத்துறைப்பூண்டி பாமக நகரச் செயலாளா் கல்விப்பிரியன் நீதிராஜா புதிய பேருந்து நிலையத்தில் தொலைக்காட்சி விளம்பரத்துக்காக நகராட்சியில் செலுத்திய முன்வைப்புத் தொகையை திரும்ப வழங்குமாறு நகராட்சி ஆணையா் (பொறுப்பு) செங்குட்டுவனிடம் கேட்டாராம்.
அப்போது, தணிக்கை அறிக்கை கிடைத்ததும் அந்த தொகை வழங்கப்படும் என்று நகராட்சி ஆணையா் பதிலளித்தாா். இதனால், தனது நண்பா்களுடன் சோ்ந்து நகராட்சி ஆணையரை தகாத வாா்த்தைகளால் திட்டிய கல்விப்பிரியன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
புகாரின்பேரில், பாமக நகர செயலாளா் கல்வி பிரியன் நீதிராஜா உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.