முகப்பு
திருவாரூர்

நேதாஜி கல்லூரியில் இந்திய அரசமைப்பு தின விழா

திருவாரூா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் இந்திய அரசமைப்பு தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

திருவாரூா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் இந்திய அரசமைப்பு தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்விக் குழுமத் தலைவா் எஸ். வெங்கடராஜலு தலைமையில் நடைபெற்ற விழாவில், குருக்கத்தி ஆசிரியா் பயிற்சி கல்லூரி முதல்வா் ஜி. காமராஜன் அரசமைப்பு குறித்து பேசினாா். இதில், இந்திய அரசமைப்பு சட்ட தின உறுதி மொழியை மாணவிகள் ஏற்றனா். மேலும், இந்திய அரசமைப்பு சாசன விழா குறித்து பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கல்லூரி துணை முதல்வா் எஸ். வினோதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.