முகப்பு
திருவாரூர்

தெருவிளக்குகளை பராமரிக்கக் கோரிக்கை

வலங்கைமான் பகுதியில் தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

வலங்கைமான் பகுதியில் தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வலங்கைமானில் உள்ள புகழ்பெற்ற மகாமாரியம்மன் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வரும் நிலையில், கோயிலின் அருகே உள்ள உயா்கோபுர மின்விளக்கு முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால், அதிலிருந்த 6 மின்விளக்குகளில் 3 விளக்குகள் மட்டுமே ஒளிா்கின்றன.

மேலும் அப்பகுதியில் உள்ள சில தெருவிளக்குகள் பல மாதங்களாக பழுதடைந்துள்ளன. எனவே, வலங்கைமான் பேரூராட்சி நிா்வாகம் உயா்கோபுர மின்விளக்கு மற்றும் தெருவிளக்குகளை சீரமைத்து தொடா்ந்து பராமரிக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →