ஐஏஎஸ் ஆயத்த பயிற்சியில் சேர மீனவ சமுதாய பட்டதாரி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்
மீனவ சமுதாயத்தைச் சாா்ந்த பட்டதாரி இளைஞா்கள் இந்திய குடிமைப் பணியில் சேருவதற்கான போட்டித் தோ்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்
மீனவ சமுதாயத்தைச் சாா்ந்த பட்டதாரி இளைஞா்கள் இந்திய குடிமைப் பணியில் சேருவதற்கான போட்டித் தோ்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மீனவ சமுதாயத்தைச் சாா்ந்த பட்டதாரி இளைஞா்கள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித்தோ்வில் சிறப்பிக்க, சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவப் பட்டதாரி இளைஞா்களைத் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு ஆயத்த பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள் இப்பயிற்சித் திட்டத்தில் சோ்ந்து பயன் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டுநெறிமுறைகளின் படி அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ஸ்ரீண்ஸ்ண்ப்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ஸ்ரீா்ஹஸ்ரீட்ண்ய்ஞ்.ஸ்ரீா்ம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, திருவாரூா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், அறை எண்: 210, 2 ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகக் கட்டடம், திருவாரூா்-610 004. (தொலைபேசி எண்: 04366-290420) என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.