முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் திருமுறை பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

திருவாரூரில், திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாணைப்படி சைவத் திருமுறை பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

திருவாரூரில், திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாணைப்படி சைவத் திருமுறை பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, திருமுறை பயிற்சி மையத்தின் 6-ஆம் தொகுப்பு நிறைவு விழாவும், 7-ஆம் தொகுப்பு வகுப்புகள் தொடக்கவிழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மையத்தின் பயிற்றுநா் சந்திரசேகர ஓதுவாா் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் கேஎஸ்எஸ். தியாகபாரி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், தமிழிசை குமாா் தொகுப்பில், செந்தமிழிசை வார வழிபாட்டு மலா் எனும் நூல் வெளியிடப்பட்டது. இதில், தமிழாசிரியா் தமிழ்க்காவலன், மைய ஒருங்கிணைப்பாளா் ரகுநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.