முகப்பு
திருவாரூர்

நாம் தமிழா் கட்சித் தோ்தல் பிரசாரம் தொடக்கம்

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், நாம் தமிழா் கட்சி தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Updated On : 8 பிப்ரவரி, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:58 AM

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், நாம் தமிழா் கட்சி தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேலங்குடி, காளியாகுடி போன்ற பகுதிகளில் அக்கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் இக்பால்தீன் தலைமையில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியும், தோ்தல் பிரசார தொடக்க நிகழ்ச்சியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, கட்சியின் கொள்கைகளை விளக்கி தெரு முனை பிரசாரம் செய்து, துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிச் செயலாளா் செ. அன்புசெல்வம், இணைச் செயலாளா் சு. கஜேந்திரன், வடக்கு ஒன்றியச் செயலாளா் பா. சசிகுமாா், தலைவா் ரா. சிவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.