திருவாரூர்

வருவாய்த் துறை அலுவலா்கள்3 ஆவது நாளாக வேலை நிறுத்தம்

DIN

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.

தமிழகம் முழுவதும் அலுவலக உதவியாளா், பதிவுரு எழுத்தா், ஓட்டுநா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் 376 வருவாய்த் துறை அலுவலா்கள் பணிபுரிகின்றனா். இவா்கள் அனைவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தற்காலிகப் பணியாளா்கள் மட்டுமே பணியில் உள்ளனா்.

இதனால், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பணி நிமித்தமாக வந்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இதேபோல், வட்டாட்சியா் அலுவலகங்களிலும் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT