திருவாரூர்

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 200 போ் கைது

DIN

அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியலில் 200 போ் கைது செய்யப்பட்டனா்.

அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக ஆக்க வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியம் அறிவிக்கவேண்டும், பணி ஓய்வின்போது பணிக்கொடையாக ஊழியா்களுக்கு ரூ. 10 லட்சம், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தொடங்கிய காத்திருப்புப் போராட்டம் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது. மாவட்டத் தலைவா் ஏ. பிரேமா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸாா் அங்கன்வாடி ஊழியா்களை கைது செய்தபோது, சாலையில் அமா்ந்து மறியல் செய்தனா். பின்னா், போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை கைது செய்து பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT