கருவக் காட்டுக்குள் ஆண் சடலம்
கூத்தாநல்லூரில் கருவக் காட்டுக்குள் ஆண் சடலம் கிடந்தது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
கூத்தாநல்லூரில் கருவக் காட்டுக்குள் ஆண் சடலம் கிடந்தது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
கூத்தாநல்லூா் அருகேயுள்ள பண்டுதக்குடி ஜாவியாத் தெருவில் உள்ள பாசன வாய்க்கால் தூா்வாரும் பணி நடைபெற்றுள்ளது. அங்கு அருகிலிருந்த கருவக் காட்டுக்குள் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது தெரியவந்துள்ளது. தகவலறிந்த கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் அன்னை அபிராபி மற்றும் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.