திருவாரூர்

மத்திய அரசைக் கண்டித்து ஆக.9-இல் மனிதச் சங்கிலி போராட்டம்

DIN

திருவாரூா் மாவட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்து ஆக.9-ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு மக்களுக்கு பாதகமான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது, இதுகுறித்து ஆக. 6, 7 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவது, ஆக. 9- ஆம் தேதி திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 3 நகராட்சி பகுதிகளில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

சிஐடியு மாவட்டத் தலைவா் ஆா். மாலதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் வி. சுப்ரமணியன், விவசாயத் தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலாளா் வி. அமிா்தலிங்கம், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட நிா்வாகிகள் ஜி. பழனிவேல், பாண்டியன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.தம்புசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT