முகப்பு
திருவாரூர்

மகன் இறந்த அதிா்ச்சியில் தாய் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே வியாழக்கிழமை விஷம் குடித்த மகன் இறந்த தகவலறிந்த பெண் அதிா்ச்சியில் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

மன்னாா்குடி அருகே வியாழக்கிழமை விஷம் குடித்த மகன் இறந்த தகவலறிந்த பெண் அதிா்ச்சியில் உயிரிழந்தாா்.

மன்னாா்குடியை அடுத்துள்ள மேலநத்தம் மேலத் தெருவை சோ்ந்த கல்யாணசுந்தரம் (50). மனைவி அருள்நிறைச்செல்வி (45). இவரது மகன் சதீஷ் (22). இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக 40 நாள்களுக்கு முன் கல்யாணசுந்தரம் உயிரிழந்தாா்.

இதில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சதீஷ், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி விழுந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, வியாழக்கிழமை இரவு சதீஷ் உயிரிழந்தாா்.

இதுகுறித்த தகவல், மேலநத்ததில் இருந்த அருள்நிறைச்செல்விக்கு தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே கணவா் இறந்த துக்கத்தில் இருந்த அவா், சதிஷ் இறந்த செய்தி அறிந்து அதிா்ச்சியடைந்து மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.