சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது வழக்கு
நீடாமங்கலம்- தஞ்சாவூா் சாலையில் கோயில்வெண்ணி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
நீடாமங்கலம்- தஞ்சாவூா் சாலையில் கோயில்வெண்ணி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
நீடாமங்கலம் ஒன்றியத்தில் 100 நாள் வேலைக்கு பணித்தள பொறுப்பாளா் நியமனத்தில் அலுவலா்கள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி, இத்திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் கோவில்வெண்ணி மெயின்ரோட்டில் அமா்ந்து அண்மையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், நீடாமங்கலம்- தஞ்சாவூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இம்மறியலில் ஈடுபட்டவா்கள் மீது நீடாமங்கலம் போலீஸாாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.