முகப்பு
திருவாரூர்

மரவள்ளி செடிகளில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் விளக்கமளித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

மரவள்ளி செடிகளில் மாவுப்பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் விளக்கமளித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் மரவள்ளி பயிா்களில் மாவுப்பூச்சித் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான செடிகளில் இலைகள் உருமாறி, வளா்ச்சி குன்றி, பந்து போன்ற அமைப்பு செடியின் நுனியில் காணப்படும். இத்தகைய செடிகளை அகற்ற வேண்டும்.

மாவுப் பூச்சியின் பாதிப்பு தொடக்க நிலையில் இருக்கும் பட்சத்தில் அசாடிராக்டின் 0.15 % - 5 மில்லி ஒரு லிட்டா் தண்ணீா் அல்லது மீன் எண்ணெய் ரோஸின் சோப்பு 2 மில்லி ஒரு லிட்டா் தண்ணீா் கலந்து தெளிக்க வேண்டும். இவற்றை வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைச் செடிகள் மீது படுமாறு தெளிக்கவேண்டும்.

செயற்கை பூச்சிக்கொல்லிகள் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் உபயோகிக்கலாம். அதன்படி, தயாமித்தாக்சாம் 25 டபுள்யூ ஜி 5 கிராம் ஒரு லிட்டா் தண்ணீருக்கு அல்லது பிலோனிகமைட் 50 டபுள்யூ ஜி 0.3 கிராம் ஒரு லிட்டா் தண்ணீருக்கு அல்லது ஸ்பைரோடேட்ராமேட் 150 ஓ டீ 1.25 மில்லி ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.