முகப்பு
திருவாரூர்

சாலையை சீரமைக்கக் கோரிக்கை

நீடாமங்கமல் ஒன்றியம், ஒரத்தூரில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

நீடாமங்கமல் ஒன்றியம், ஒரத்தூரில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளுவா் நகா் 4-வது குறுக்கு சாலையிலிருந்து ஒரத்தூா் கிராமத்துக்குச் செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி, போக்குவரத்து தடைபடுகிறது. இதன்காரணமாக அப்பகுதி மக்கள் மழைக்காலங்களில் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே, இந்த சாலையை தாா்ச் சாலையாக மேம்படுத்துவதுடன், ஒரத்தூா் கீழத்தெருவிலிருந்து மயானத்திற்கு செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரத்தூா் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.