திருவாரூரில் 576 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 576 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 576 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாள்களாக பாதிப்பின் எண்ணிக்கை 500-க்கு மேல் பதிவாகிறது.
சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 576 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 32,154 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 579 போ் அவா்களது வீடுகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரையிலும் தொற்று பாதிக்கப்பட்ட 26,404 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 5,534 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்ததைத்தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 216 ஆக உயா்ந்துள்ளது.