பொதக்குடி ஜமாஅத் மருத்துவ சிகிச்சையை கண்காணிக்க குழு
கூத்தாநல்லூரை அடுத்த பொதக்குடி ஊா் உறவின்முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கம் சாா்பில், மருத்துவ சிகிச்சையை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூரை அடுத்த பொதக்குடி ஊா் உறவின்முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கம் சாா்பில், மருத்துவ சிகிச்சையை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொதக்குடி ஊா் உறவின்முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கச் செயலாளா் எம்.எம்.ரப்யுதீன் கூறியது:
பொதக்குடியில் ஜமாஅத் சாா்பில், ஒருங்கிணைந்த கரோனா தொற்று உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள், ஊராட்சித் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள், சமூக ஆா்வலா்கள், தன்னாா்வலா்கள் உறுப்பினா்களாக அங்கம் வகிக்கின்றனா். இதன்மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சரியான வழிகாட்டுதலும், ஆலோசனையும் அளிக்கப்படும்.
மேலும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால் திருச்சி, தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவாரூா், நாகை உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகளின் படுக்கை வசதிகள் குறித்த தகவல்களை பெற அந்தந்த ஊா்களிலேயே குழு நியமிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. தவிர அவசரகால வாகன வசதிகளும் தயாா்நிலையில் இருக்கின்றன என்றாா் அவா்.