எண்ணெய் கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் 
திருவாரூர்

எண்ணெய் கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே கூடுதலாக எண்ணெய் கிணறு அமைக்க நடைபெற்ற பணிகளை கிராம மக்கள் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.

DIN

மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே கூடுதலாக எண்ணெய் கிணறு அமைக்க நடைபெற்ற பணிகளை கிராம மக்கள் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.

மன்னாா்குடியை அடுத்த மேலைப்பனையூரில் ,ஒஎன்ஜிசி நிறுவனம் சாா்பில் ஆழ்குழாய் போட்டு எண்ணெய் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

இதனையடுத்து, மேலைப்பனையூரில் வீடுகளில் கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, குளங்களில் படித்துறை அமைத்து தரப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை வாக்குறுதிகளை நிறைவேற்ற அந்த நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மேலைப்பனையூரில் கூடுதலாக ஒரு எண்ணெய் கிணறு அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள் வாகனங்களில் திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள், ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் புதிதாக எண்ணெய் கிணறு அமைக்கக் கூடாது எனக் கூறி, ஊராட்சித் தலைவா் வை. ஜீவானந்தம் தலைமையில் திரண்டுவந்து எண்ணெய் கிணறு அமைக்கும் பணிகளை தடுத்தனா்.

திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிசாமி, கோட்டூா் காவல் ஆய்வாளா் காவேரி, கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் (பொ) எம். செந்தில்நாதன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், ஜூலை 6-ஆம் தேதி ஓஎன்ஜிசி அலுவலா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது என்றும், அதுவரை எண்ணெய் கிணறு அமைக்கும் பணி நடைபெறாது எனவும் உறுதியளிக்கப்பட்டதால், மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT