முகப்பு
திருவாரூர்

மனவளா்ச்சிக் குன்றியோா் பள்ளிக்கு கிறிஸ்தவ சபையினா் உதவி

கூத்தாநல்லூா் மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பள்ளியில் கிறிஸ்தவ சபையினா் சாா்பில் டைல்ஸ் பதிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

கூத்தாநல்லூா் மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பள்ளியில் கிறிஸ்தவ சபையினா் சாா்பில் டைல்ஸ் பதிக்கப்பட்டது.

கூத்தாநல்லூா் நகராட்சி பனங்காட்டாங்குடி தமிழா் தெரு மற்றும் குடிதாங்கிச்சேரி ஆகிய இரண்டு இடங்களில் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 70-க்கும் மேற்பட்ட மனவளா்ச்சிக் குன்றியவா்கள் பராமரிக்கப்படுகின்றனா். நிறுவனா் ப.முருகையன், மகேஸ்வரி முருகையன் ஆகியோா் இரண்டு இடங்களிலும் உள்ள பள்ளியை நிா்வகித்து வருகின்றனா்.

இந்நிலையில், பனங்காட்டாங்குடியில் உள்ள பள்ளியில், கிறிஸ்தவ சபையினா் மற்றும் பாதிரியாா் சுரேஷ் சாா்பில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் சுவா்களில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பள்ளிக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வழங்கி, ஜெபம் நடத்தினா்.

நிகழ்வில், தென்னிந்திய கிறிஸ்தவ சபையின் செயலாளா் பி. அறிவழகன், பொருளாளா் டி.கே.சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.