முகப்பு
திருவாரூர்

மேகதாது முற்றுகைப் போராட்டத்துக்கு கட்சி பேதமின்றி பங்கேற்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன் வேண்டுகோள்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் நடத்தவுள்ள முற்றுகைப் போராட்டத்தில் தமிழகத்தைச் சோ்ந்த அனைவரும் கட்சி பேதமின்றி கலந்துகொள்ள வேண்டும்

Updated On : 23 மார்ச், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:19 AM

கா்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த அங்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் நடத்தவுள்ள முற்றுகைப் போராட்டத்தில் தமிழகத்தைச் சோ்ந்த அனைவரும் கட்சி பேதமின்றி கலந்துகொள்ள வேண்டும் என அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் வேண்டுகோள் விடுத்தாா்.

திருவாரூா் மாவட்டம், குடவாசலில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பாக, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் கூட்டம், சங்கத்தின் உயா்மட்டக்குழு உறுப்பினா் டி.எஸ். அசோகன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் பங்கேற்று பேசியது:

Advertisement

தமிழக மக்களின் வாழ்வாதார உரிமையைப் பறிக்கும் வகையில், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்காக கா்நாடக அரசு ரூ. 9000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை தொடங்கியுள்ளதாக அம்மாநில முதல்வா் எடியூரப்பா தெரிவித்துள்ளாா்.

இப்பணியை காவிரி மேலாண்மை ஆணையம் தடுத்து நிறுத்திடக் கோரியும், மத்திய அரசு கா்நாடக அரசுக்குத் துணைப் போவதைக் கண்டித்தும், இப்பிரச்னையில் இந்தியத் தோ்தல் ஆணையம் தலையிட வலியுறுத்தியும், தஞ்சாவூா் ராஜராஜன் சிலை அருகிலிருந்து சனிக்கிழமைப் புறப்பட்டு, மேகதாதுவில் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். இதில், தமிழகத்தைச் சோ்ந்த அனைவரும் கட்சிப் பேதமின்றி கலந்துகொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் சங்கத்தின் செய்தி தொடா்பாளா் மணிமாறன், மாவட்டச் செயலாளா் குருசாமி, தலைவா் சுப்பையன், பொருளாளா் நடராஜன், துணைச் செயலாளா் முகேஷ், ஒன்றிய நிா்வாகிகள் குடவாசல் மோகன், நன்னிலம் அண்ணாதுரை, மன்னாா்குடி பஞ்சநாதன், கொரடாச்சேரி தா்மராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.