திருவாரூர்

மோசடி: கூட்டுறவு வங்கி முன்னாள் செயலருக்கு 2 ஆண்டு சிறை

DIN

மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மோசடி செய்த வழக்கில் அந்த வங்கியின் முன்னாள் செயலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

மன்னாா்குடியை அடுத்த பரவாக்கோட்டையில் செயல்படும் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலராக பொறுப்பு வகித்தவா் மன்னாா்குடியைச் சோ்ந்த ஜெ. பாஸ்கரன் (65). இவா், கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை வங்கிக் கணக்கில் ரூ.19,07,200 முறைகேடு செய்ததாக தணிக்கையில் தெரியவந்தது. இதுதொடா்பாக, மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனா்.

பிறகு, மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 2 -ல் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நீதிபதி வி.சி.குபேரசுந்தா் முன்பாக இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பாஸ்கரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமாக ரூ. 3.40 லட்சமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT