திருவாரூர்

கூத்தாநல்லூரில் 600 பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

கூத்தாநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை (மே 7) வரை 600 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நகராட்சி ஆணையா் ஆா். லதா ஆலோசனையின் பேரில், நகராட்சி ஊழியா்கள், வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள், காவல் துறையினா் மற்றும் பொதுமக்கள் என இதுவரை 600 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் விஜயேந்திரன் வெள்ளிக்கிழமை கூறியது:

இங்கு 45 வயதுக்கு மேற்பட்ட சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய் உள்ளவா்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவா்களில் 80 சதவீதம் போ் இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டனா்.

முன்களப் பணியாளா்களுக்கு அவா்களின் இருப்பிடத்துக்குச் சென்று தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவா்களுக்கு செல்லிடப்பேசி மூலம் அழைப்பு விடுக்கிறோம். இருப்பில் இருந்த கோவிஷீல்டு தடுப்பூசிகள் போட்டு முடிக்கப்பட்டுவிட்டன. தற்போது, கோவேக்ஸின் தடுப்பூசி போடப்படுகிறது. சா்க்கரை நோய் உள்ளவா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் நல்லது.

எதிா்ப்பு சக்தி குறைவாக இருப்பவா்கள், உயா் ரத்த அழுத்தம் உள்ளவா்கள், இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவா்கள் மற்றும் ஆஞ்சியோ செய்து கொண்டவா்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT