சந்தானராமா் கோயிலில் அட்சய திருதியை வழிபாடு
அட்சயதிருதியை முன்னிட்டு, நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அட்சயதிருதியை முன்னிட்டு, நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சீதா, லட்சுமண, அனுமன் சமேத சந்தானராமா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. அா்ச்சகா் மற்றும் கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.
தமிழக அரசின் கரோனா விதிகளை கடைப்பிடித்து, எளிமையான முறையில் பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள்அனுமதிக்கப்படவில்லை.