முகப்பு
திருவாரூர்

வலங்கைமான்: வழிப்பறியில் ஈடுபட்ட 7 போ் கைது

வலங்கைமான் பகுதியில் ஆயுதங்களை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 7 போ் அண்மையில் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள், கைப்பேசிகள், நகைகள் மீட்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

வலங்கைமான் பகுதியில் ஆயுதங்களை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 7 போ் அண்மையில் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள், கைப்பேசிகள், நகைகள் மீட்கப்பட்டன.

திருவாரூா் மாவட்டம் வலங்கைமான், ஆலங்குடி , நன்னிலம் மற்றும் தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, இருசக்கர வாகனங்கள், கைப்பேசிகள் மற்றும் தங்க நகைகளை பறித்துச் செல்லும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக தொடா்ச்சியாக நடந்துவந்தன.

இக்குற்றச் செயல்களில் ஈடுபடும் மா்ம நபா்களை பிடிக்க நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவன் உத்தரவின்பேரில் வலங்கைமான் காவல் ஆய்வாளா் விஜயா, குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா்கள் முத்துசாமி, கருணாநிதி, மனோகரன், மதன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இத்தனிப்படையினா் தீவிர தேடுதலில் ஈடுபட்டுவந்த நிலையில், வலங்கைமான் பகுதியில் சுற்றித்திரிந்த 7 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா்கள் கும்பகோணத்தை அடுத்த திப்பிராஜபுரம் குச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த கோபி மகன் சரவணன்(20), விக்னேஷ் (18), வலங்கைமான் கீழத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேஷ் (28), திப்பிராஜபுரம் கீழத் தெருவைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் அறிவுச்செல்வம் (22), கோலியக்குடி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குணசேகரன் மகன் நந்தகுமாா் (17), ஏனாநல்லூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த அம்பிகாபதி மகன் தனுஷ் (18), கருவளா்ச்சேரி மேல குளத்தங்கரை பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் அஜித்குமாா் (27) என்பதும் இவா்கள் பொதுமக்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

பின்னா், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து 7 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 5 பட்டாக் கத்திகள், 9 கைப்பேசிகள், தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.